புதுச்சேரி: கருவடிக்குப்பம் விநாயகர் கோவில் குளம் தினமலர் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டுள்ளது.கருவடிக்குப்பம் மெயின் ரோடு, லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில் உள்ள விநாயகர் கோவில் குளம் புதர்கள் மண்டிக் கிடப்பதாக சில நாட்களுக்கு முன் தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில் இக் குளத்தின் கரையைச் சுற்றிலும் இருந்த புதர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, புதுப் பொலிவு பெற்றுள்ளது.இக் குளத்தை அமைச்சர் கல்யாணசுந்தரம், முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். குளத்தில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அப்புறப்படுத்தி நீர் மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.