திருமலைக்கேணி: சாணார்பட்டி அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.,5ல் சூரசம்ஹாரம் நடக்கிறது. இங்கு கடந்த அக்., 31ல் கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி சஷ்டி விரதம் துவங்கினர். தினமும் சிறப்பு பூஜை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முருகப்பெருமான் வேல் வாங்கும் காட்சி நடந்தது. நவ.,5 மாலை 3 மணிக்கு கிரிவலப்பாதையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. 6 மணிக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் இந்துசமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.