கேளம்பாக்கம்: கேளம்பாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம், ரேணுகாம்பாள் நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், நேற்று மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அன்னதானங்களும் வழங்கப்பட்டன. இவ்விழாவில், கேளம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.