அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில், கந்தசஷ்டியை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிவசுப்பிரமணியன் சிறப்பு அலங்காரத்தில், முருகப்பெருமான் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.