பதிவு செய்த நாள்
08
நவ
2016
11:11
தஞ்சாவூர்: திருவையாறு சற்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின், 170வது ஆண்டு ஆராதனை விழா, ஜன., 13ல் துவங்குகிறது. தஞ்சை மாவட்டம், திருவையாறு தியாகராஜர் திருமண மண்டபத்தில், ஸ்ரீ தியாக பிர்ம்ம மகோத்சவ சபா நிர்வாக குழு கூட்டம், சபா தலைவர், ஜீ.ஆர்.மூப்பனார் தலைமையில் நடைபெற்றது. அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் முன்னிலை வகித்தார்.ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின், 170வது ஆண்டு ஆராதனை விழா, 2017 ஜன., 13ல் துவங்கி, 17 வரை, ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. 17ம் தேதி, ஆராதனை விழா நடைபெறும்; அன்று, 500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில், பஞ்ரத்தன கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்துவர்.இவ்வாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.