சபரிமலை : ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வரும் 17ம் தேதி மாலை திறக்கப்படும். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாத பூஜை மற்றும் உற்சவங்களுக்காக கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், ஐப்பசி மாத மற்றும் சிறப்பு பூஜைகளுக்காக கோவில் நடை, வரும் 17ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.