மதுரை: மாணவர்களின் கல்வி கற்கும் திறன் மேம்பாட்டிற்காக, வீணை வழிபாடு மன்றம் சார்பில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை இசை வழிபாடு நடந்தது. உக்கிரபாண்டிய பட்டர் இறை வணக்கம் பாடினார். கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமை வகித்தார். வீணை வழிபாடு மன்ற நிறுவனர் சின்னதுரை வரவேற்றார். வீணை இசை பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். வேதமன்ற நிறுவனர் முத்துசாமி, வேணுகா குழலிசை சங்க நிறுவனர் பாஸ்கரராஜன், மதுரை நாட்டியாஞ்சலி குழும நிறுவனர் சீனிவாசன் மற்றும் பலர் பங்கேற்றனர். வீணை இசைத்த அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.