பதிவு செய்த நாள்
17
நவ
2016
02:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் பிரசாந்த். மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும் டிச., 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிச., 12 அன்று, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண வரும் பக்தர்கள், 14 கி.மீ தூரம் கிரிவலம் செல்வர். வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தங்களது பூஜை சாமான், திண்பண்டம் உள்ளிட்ட பிற பொருட்களை கொண்டு வரும்போது, சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு, பிளாஸ்டிக் கேரி பேக்குகள் கொண்டு வருவதை தவிர்த்து, துணி மற்றும் சணல் பை கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வருபவர்களுக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம், கிரிவலப்பாதையில், ஐந்து முக்கிய இடங்களில் டோக்கன் வழங்கப்படும். குலுக்கல் முறையில் ஒவ்வொரு, எட்டு மணி நேரத்திற்கும் டோக்கன் பெற்றவர்களில், மூன்று பேருக்கு, இரண்டு கிராம் எடையுள்ள தங்க நாணயம், 10 கிராம் எடையுள்ள, 24 வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.