பதிவு செய்த நாள்
22
நவ
2016
02:11
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, சித்தர் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சார்பாக, கார்த்திகை சோமவாரம் முன்னிட்டு, உலக அமைதி வேண்டி, 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. அதற்காக, கோவில் பின்புறம், குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, 108 சங்கில் நிரப்பினர். மண்டபத்தில், யாக குண்டம் அமைத்து, அதைச்சுற்றி, 108 சங்குகளை வைத்து, மூன்று மணி நேரம், வேத மந்திரம் முழங்க, யாகம் நடந்தது. காலாங்கி சித்தருக்கு, 108 சங்கில் உள்ள புனித தீர்த்தத்தில், அபிஷேகம் செய்து, பூஜை நிறைவடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.