பதிவு செய்த நாள்
23
நவ
2016
10:11
புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் ( 23 ம் தேதி) புட்டபர்த்தியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு வழக்கம் போல பக்தர்கள் திரளாக அதிகாலை முதலே புட்டபர்த்தியில் உள்ள குல்வந்த் ஹாலில் குழுமியிருந்தனர்.
தர்மத்தை நிலைநாட்ட யுகந்தோறும் அவதரிக்கிறேன் என்பது பகவான் கிருஷ்ணரின் வாக்கு. அன்பே வடிவான கடவுள், அருள்புரிவதற்காக அவ்வப்போது இம்மண்ணுலகில் அற்புதங்களையும், அவதாரங்களையும் நிகழ்த்தி தன் இருப்பை உலகத்திற்கு அறிவிக்கிறார். அப்படிப்பட்ட அவதாரபுருஷராக சாய்பாபா விளங்குகிறார். 1926, நவம்பர் 23ல் பிறந்த அவருக்கு 91வது பிறந்தநாள் இப்போது கொண்டாடப்படுகிறது. புட்டபர்த்தி என்றால் ‘சாய்பாபா என்ற திருநாமம் தான் நினைவில் வரும். இவ்வூர் அந்தக் காலத்தில் கொல்லப்பள்ளி என்று அழைக்கப்பட்டு வந் தது. பசுக்கூட்டம் நிறைந்த ஊர் என்பது இதன் பொருளாகும். அங்கு பசு மேய்க்கும் இடையர்கள் அதிகம் வாழ்ந்தனர். ஒரு பசுவிற்கு மட்டும் மேய் ச்சலுக்குச் சென்று திரும்பும் வேளையில் பால் திருடப்படுவது வாடிக்கையாக நடந்து வந்தது. உண்மையை அறிய விரும்பிய இடையன், பசுவைப் பின் தொடர்ந்தான். குறிப்பிட்ட இடத்தில் நாகப்பாம்பு ஒன்று பசுவின் பாலை அருந்துவதைக் கண்டான். அக்காட்சியைக் கண்டு கோபம் கொண்ட அவன், பெரிய பாறாங்கல்லால் பாம்பைக் கொன்றான். அந்த நிகழ்ச்சிக்குப் பின் அவ்வூர் முழுக்க பாம்பு புற்றுகள் ஏராளமாகத் தோன்றின. எங்கு பார்த்தாலும் புற்றுகள் இருந்ததால் கொல்லப்பள்ளி என்ற பெயர் புட்டவர்த்தினி என மாறியது. புட்டவர்த்தினி என்றால் புற்றுகள் நிறைந்த இடம். பாம்பைக் கொன்றதால் தான் இந்த அவல நிலை என்பதை அறிந்த மக்கள் பாம்பு இறந்த இடத்தில் தங்கள் குலதெய்வமான கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர். அதன் பின் நிலைமை சீரானது.மக்களும் கோபாலசுவாமி வழிபாட்டினை முறையாகத் தொடர்ந்து வந்தனர். இந் நிலையில் அங்கு ராஜு வம்சத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் இருந்து வந்தது.
அந்த வம்சத்தில் மிகப்பெரிய மகான் ரத்னாகரம் வெங்க அவதூதர் என்றொருவர் இருந்தார். அந்த வழியில் வந்தவர் கொண்டமராஜு என்பவரும் சிறந்த பக்தராகத் திகழ்ந்தார். எப்போதும் ராமாயண புத்தகத்தை வாசிப்பது அவருடைய பழக்கமாக இருந்து வந்தது. மக்களுக்கு ராமபிரான் பெரு மைகளை எடுத்துச் சொல்வதில் அலாதி பிரியம் கொண்டவராக வாழ்ந்தார். அவருக்கு இரு மகன்கள் இருந்தனர். மூத்தவர் பெத்த வெங்கம ராஜு. இளையவர் சின்ன வெங்கம ராஜு. இருவரும் தந்தையைப் போலவே பக்தியில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தனர். கொண்டமராஜுவும், அவருடைய மனைவி லட்சுமம்மாவும் ராமாயணத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டு வாழ்ந்தனர். இவர்களுக்கு கர்நூல் மாவட்டத்தில் ‘கோலி மிகண்ட்லா என்ற கிராமத்தில் சில உறவினர்கள் இருந்தனர். அங்கே சுப்பராஜு என்றொருவர் இருந்தார். சிவபக்தி மிக்க அவர் சிவாலயம் ஒன்றை கட்டினார்.அவரு க்கு அழகான பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அக்கிராமத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. சுப் பராஜுவின் நிலையறிந்த உறவினர் கொண்டமராஜு,“நீங்கள் ஏன் கோலிமிகண்ட்லாவில் இருந்து கொண்டு சிரமப்பட வேண்டும்? சித்ராவதி ஆற் றோரம் இருக்கும் கர்நாடக நாகப்பள்ளியில் புதுவீடு கட்டி குடியேறிவிடுங்கள். வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். வாருங்கள். இந்த தருணத்தில் இன்னொரு வாக்குறுதியும் கொண்டமராஜு அளித்தார்.
உங்கள் மகளான ஈஸ்வரம்மா தான் என்வீட்டு மருமகள்! என்றும் வாக்களித்தார். சாய்பாபாவைச் சுமக்கும் பேறு பெற்றவர் ஈஸ்வரம்மா. குழந்தை யாக இருந்தபோதே ஈஸ்வரம்மா புட்டபர்த்தியின் அருகில் உள்ள கர்நாடக நாகப்பள்ளிக்கு குடிவந்தார். இத்தம்பதியருக்கு சேஷமராஜு, வெ ங்கம்மா, பர்வதம்மா என்னும் குழந்தைகள் பிறந்தனர். பின்னர் தொடர்ந்து நான்கு குறைமாதப் பிரசவங்கள் நிகழ்ந்தன. தன் மருமகள் தீர்க்காயுள் உள்ள நல்ல குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று பெரியவர்கள் பிரார்த்தித்தனர். அப்போது அற்புத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. கிணற்றில் நீர் எடுத்துக் கொண்டிருந்தபோது, நீலநிற ஒளி பந்து போல திரண்டு வந்து ஈஸ்வரம்மாவின் உடலில் புகுந்தது. தெய்வீக நிகழ்ச்சி இது என்பதை உணர்ந்த ஈஸ்வரம்மா, தன் மாமியாரிடம் மட்டும் இதனை விளக்கிச் சொன்னார். இதையடுத்து ஈஸ்வரம்மா கர்ப்பவதியானார். பகவான் கிருஷ்ணர் தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தது போலவே, சாய்பாபாவும் ஈஸ்வரம்மாவின் எட்டாவது குழந்தை. 1926 நவம்பர் 23ல் அக்ஷயவரு ஷம் கார்த்திகை மாதம் திருவாதிரை நாளில் பாபா அவதரித்தார். சிவனுக்கு உகந்த நாளாக அந்நாள் அமைந்திருந்தது. அன்று அதிகாலையிலேயே பாபாவின் பாட்டி லட்சுமம்மா சத்யநாராயண பூஜைக்கு கிளம்பினார். பிரசாதத்தை வாங்கிக் கொண்டு மருமகள் ஈஸ்வரம்மாவிற்கு கொடுத்தபோது கோயில் மணி ஒலித்ததோடு, வீட்டில் இருந்த வாத்தியக்கருவிகள் தானாகவே இசைத்து நின்றன. இதைக் கேட்டு லட்சுமம்மா ஆனந்தம் அடைந்தார். அந்த வேளையில் பாபா இம்மண்ணுலகத்தில் அவதரித்தார். அவரது இடது கன்னம் மற்றும் மார்பிலும் மச்சங்கள் இருந்தன. பாதங்களில் விஷ்ணுவிற்குரிய சங்கு, சக்கர ரேகைகள் அமைந்திருந்தன. இப்படி, நம் இதயமெல்லாம் நிறையும் வகையில்,தெய்வீகமாக அமைந்தது பாபாவின் பிறப்பு.