காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் அம்பாள் அவதரித்த தினம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2016 10:11
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்பாள் அவதரித்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. காலை 11 மணிக்கு அபிேஷகமும், 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4.30 மணிக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. முன்னதாக காலை 10 மணிக்கு 1008 பால்குடம், முத்தாலம்மன் கோயிலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தது. இரவு 7 மணிக்கு அம்பாள் வெள்ளி ரதத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் ராமசாமி, செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வரர், கணக்கர் அழகு பாண்டி உள்ளிட்டோர் செய்தனர்.