சபரிமலை கோயில் பெயர் மாற்றத்திற்கு பெண்களின் அனுமதி விவகாரம் காரணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2016 01:11
சபரிமலை: சபரிமலை கோயில் பெயர் மாற்றத்திற்கு பெண்களின் அனுமதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு முக்கிய காரணமாக இருந்தது தெரிய வந்துள்ளது.சபரிமலை கோயில் பெயர் ஆண்டாண்டு காலமாக ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் என்று இருந்து வந்தது. அண்மையில் தேவசம்போர்டு செயலர் பிறப்பித்த ஒரு சுற்றறிக்கையில், இனி கோயில் பெயர் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் என்று அழைக்கப்படும் என கூறி ,அதற்கான ஐதீகத்தையும் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் இந்த பெயர் மாற்றத்துக்கு பின்னால் பெண்களை சபரிமலையில் அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் நடந்து வழக்கு முக்கிய காரணம் இருந்துள்ளது. சாஸ்தாவும், ஐயப்பனும் இரண்டு வெவ்வேறு பிரதிஷ்டையாகும். சாஸ்தா கோயில் என்றால், அங்கு பெண்கள் அனுமதியை மறுக்க முடியாது.ஐயப்பன் பிரதிஷ்டை என்றால் அது பிரம்மச்சரியமானது. எனவே அங்கு வயது பெண்களை அனுமதிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, பல ஆவணங்களில் சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் என்றே உள்ளது. இதனால் தேவசம்போர்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் தான், இந்த பெயர் மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணனிடம் கேட்ட போது, நேரடியாக பதிலளிக்க மறுத்த அவர், தர்மசாஸ்தா திருமணம் ஆனவர் என்பதை மட்டும் ஒப்புக்கொண்டார்.