பதிவு செய்த நாள்
24
நவ
2016
12:11
கொடைக்கானல், கொடைக்கானல் ஏரிப்பகுதியில் உள்ள சாய் சுருதி வளாகத்தில் சத்ய சாய் பாபா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, உல்லன் ஸ்வெட்டர்கள், வறியோர்களுக்கு கம்பளிகள் வழங்கப்பட்டன. உடுமலைப்பேட்டை விஸ்டம் பள்ளி சி.இ.ஓ. ஜோதி ராமலிங்கம் பங்கேற்று பேசினார். விழாவில் பஜன், சாந்தம் மெட்ரிக்பள்ளியின் பால விகாஷ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. புதுச்சேரி அரவிந்த் ஆசிரம உறுப்பினர் டியா, சாந்தம் பள்ளி தாளாளர் சாந்த சதீஷ், நிர்வாகிகள் சாய்ராம், கோவிந்தராஜ், லஷ்மிபிரியா, டாக்டர் பத்மநாபன், சிவராம், ரவி பங்கேற்றனர்.