கடலூர்: கடலூர் மாவட்டம் விருதாசலம் குப்பந்தம் பகுதியில் மழை இல்லாததால் வறட்சி நிலவியது. பயிர்கள் வாடின. குளங்கள் வாடியதால், குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டனர். இந்நிலையில், அப்பகுதி ஆண்கள் மழை பெய்ய வேண்டி கொடும்பாவி ஏற்பாடு செய்து தெருத்தெருவாக சுற்றி வந்தனர். அப்போது மாரில் அடித்துக்கொண்டு ஓப்பாரி வைத்து கொண்டு வந்தனர். பின்னர் மயானத்தில் கொடும்பாவியை எரித்தனர். கொடும்பாவி ஏந்தி வந்தால்,மழை பெய்யும் என மக்கள் நம்புகின்றனர்.