தேவலோகப் பெண்ணான ரம்பை செல்வமும், பேரழகும் பெற காத்யாயினி தேவியை வழிபட்டாள். கார்த்திகை மாதம் வளர்பிறை திரிதியை அன்று அவள் வழிபட்ட நாளை ரம்பாதிரிதியை என்று புராணங்கள் கூறுகின்றன. இந்நாளில் மஞ்சளால் அம்பிகையின் உருவம் செய்து, ரம்பை வழிபட்டதால் இதற்கு தீந்திரிணி கவுரிவிரதம் (திந்திரிணி என்றால் மஞ்சள்) என்றும் பெயருண்டு. ரம்பையின் விரதத்தை ஏற்ற அம்பிகை தங்க நிறத்தில் தோன்றினாள். அழகையும், வசீகரத்தையும், செல்வவளத்தையும் ரம்பைக்கு வழங்கினாள். இந்நாளில் பெண்கள் விரதமிருந்து அம்பிகையை வழிபட்டால் சுமங்கலி பாக்கியம், பேரழகு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும் என்பது ஐதீகம். இந்நாளில் புத்தாடை, தங்க நகைகள் வாங்குவது சிறப்பு. டிச.2ல் ரம்பா திரிதியை வருகிறது.