புதூர்: மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் விழா செப்., 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள் அப்பகுதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அக்., 7ல் பூப்பல்லக்கு நடந்தது. நேற்று தெப்பத் திருவிழா நடந்தது. ஸ்ரீ தேவி, பூமா தேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளிய ஸ்ரீனிவாச பெருமாள் காலை 10.30 மணி, இரவு 7 மணிக்கு வலம் வந்தார். இன்று உற்சவசாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்வராஜ் தலைமையில் பேஷ்கார் சிவராஜேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.