பதிவு செய்த நாள்
05
டிச
2016
12:12
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் செவிலிமேடு ஜெம் நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
செவிலிமேடு ஜெம் நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் திருப்பணிகள் நடந்து, அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, பக்த ஆஞ்ச நேயர், பைரவர், நவக்கிரகம் ஆகிய சன்னிதிகள் புதுப்பிக்கப்பட்டன. இந்த பணிகள் முடிந்து கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படது. நேற்று காலை, மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
பிள்ளையார்பாளையம்: காஞ்சிபுரம் சேர்மன் சாமிநாதன் தெருவில் உள்ள ஆனந்த விநாயகர், வரசக்தி நாகம்மன் மற்றும் துர்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது. பிள்ளையார்பாளையம், சேர்மன் சாமிநாதன் தெருவில் உள்ள ஆனந்த விநாயகர், வரசக்தி நாகம்மன் மற்றும் துர்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை, கணபதி ஹோமம், கோ பூஜை போன்ற யாகங்களும், நேற்று முன்தினம் அஷ்டபந்தனம் சாத்துதல், யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. நேற்று காலை, 8:00 மணிக்கு, மேற்படி கோவில்களின் கோபுர கலசங்களில், புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலிலும், கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.