வடமதுரை: வேல்வார்கோட்டை ஊராட்சி ராஜகவுண்டன்பட்டியில் ராஜகாளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
டிச.,9 முன்தினம் மாலை தீர்த்தக் குடங்கள் அழைப்புடன் முதல் கால யாக பூஜைகள் துவங்கின. நேற்று காலை இரண்டாம் கால பூஜைகளை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன்அய்யங்கார் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். ராஜகவுண்டன்பட்டி, சிக்குபோலகவுண்டன்பட்டி, ஊராளிபட்டி, வெள்ளபொம்மன்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.