பதிவு செய்த நாள்
12
டிச
2016
12:12
தஞ்சாவூர்: மழை பெய்ய வேண்டி, 1,000க்கும் மேற்பட்டோர் அகவல் பாராயணத்தை, நான்கு மணி நேரம் வாசித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த முத்துபிள்ளை மண்டபம், சிதம்பரம் ராமலிங்க அறக்கட்டளை, பாடகச்சேரி ராமலிங்க சுவாமி அறக்கட்டளை மற்றும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இணைந்து, மழை பெய்ய வேண்டி, வடலுார் வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்தை, நேற்று, நான்கு மணி நேரம் தொடர்ந்து வாசித்தனர்.இதில், கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான வள்ளலார் பக்தர்கள் பங்கேற்றனர்.