விளாச்சேரியில் தயாராகும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2016 12:12
திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதற்கான பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. அங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சீசனுக்கு ஏற்றாற்போல் களிமண், பேப்பர் கூழ், சிமென்ட், பிளாஸ்டர் ஆப் பாரிசில் பொம்மைகள் தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் பொம்மைகள் தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திராவிற்கு செல்கின்றன. தற்போது கிறிஸ்துமஸ் பொம்மைகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. சிவக்குமார் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்குமேலாக பொம்மைகள் தயாரிக்கிறோம். மூன்று இஞ்ச் முதல் இரண்டு அடி உயரம் வரை தற்போது கிறிஸ்துமஸ் பொம்மைகள், குடில்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பொம்மைகள் பெரும்பாலும் கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது. தற்போது சீன பொம்ைமகள் வந்துவிட்டதால், நமது ஊர் பொம்மைகள் விலை வீழ்ச்சி அடைந்து விட்டது. முன்பெல்லாம் ஆர்டர்கள் அதிகமாக கிடைக்கும். சீன பொம்மைகள் வந்த பின்பு தொழில் மிகவும் மந்தமாகி விட்டது. முன்பிருந்த விலைகளைக் காட்டிலும் தற்போது பாதியாக குறைத்து கேட்கின்றனர். இதனால் லாபம் சம்பாதிப்பது மிகவும் கஷ்மாகி விட்டது. என்றார்.