பதிவு செய்த நாள்
13
டிச
2016
12:12
மயிலம்: மயிலம் சுப்ரமணியர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நடந்தது. மயிலத்தில் உள்ள, வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, 5:00 மணிக்கு, பரணி தீபம் ஏற்றப்பட்டது. ௬:00 மணிக்கு, விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, பால் அபிஷேகத்திற்கு பின், மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். பகல் 12:௦௦ மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, சங்குகன்னர் மண்டபத்தின் மேல், மகா தீபம் ஏற்றப்பட்டது. தீப ஜோதியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 6:30 மணிக்கு, சொக்கப்பனை எனும் பெருஞ்ஜோதி ஏற்றினர். இரவு 8:00 மணிக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு, உற்சவர் கிரிவலம் நடந்தது. ஏற்பாடுகளை, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.