பதிவு செய்த நாள்
14
டிச
2016
02:12
துணிவுடன் செயலாற்றும் சிம்மராசி அன்பர்களே!
குருபகவான் ராசிக்கு 2ல் இருப்பதால் ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் அதிகரிக்கும். தேவை அனைத்தும் குறைவின்றி பூர்த்தியாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். சூரியன் விருச்சிகத்தில் இருந்து தனுசுவுக்கு மாறினாலும் பலன் சுமாராகவே இருக்கும். புதன் டிச.19 முதல் ஜன.8 வரை வக்ரம் அடைந்து விருச்சிகத்தில் நின்று நற்பலனை அளிக்க காத்திருக்கிறார். டிச.18க்கு பி றகு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்புண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவராக விளங்குவீர்கள். குடும்பத்தின் தேவையனைத்தும் தாராள செலவில் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் சுபநிகழ்ச்சி குறித்த பேச்சில் நல்ல முடிவு கிடைக்க வாய்ப்புண்டு. டிச.16, ஜன.11,12 ஆகிய நாட்களில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கப் பெறுவீர்கள். டிச.19,20ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும்.
தொழில், வியாபாரத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. கடந்த மாதம் இருந்த மந்தநிலை மறையும். தொழிலாளர் நலனில் கவனம் செலுத்துவது வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழில் ரீதியான பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். சில சமயத்தில் செவ்வாயால் அவ்வப்போது சிறு குறுக்கீடு உருவாகலாம். டிச.31, ஜன.1ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க யோகமுண்டு. டிச.17,18,21,22 , ஜன.13ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். ஜன. 8 க்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லலாம்.
பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும். பணியிடத்தில் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. ஜன.8க்கு பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். பணிச்சுமைக்கு ஆளாகலாம். பொறுமையும் நிதானமும் தேவை. ஜன.9,10ல் சிறப்பான நாட்களாக அமையும்.
கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடை டிச.28க்கு பிறகு மறையும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானத்திற்கு குறைவிருக்காது. ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசாங்க வகையில் பரிசு, பாராட்டு கிடைக்க வாய் ப்புண்டு.
அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சீரான பலனைக் காண்பர். தொண்டர்களின் நலனுக்காகப் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். டிச.28,29,30ல் வீண் குழப்பம் ஏற்படலாம் கவனம். அரசியல் ரீதியான பயணத்தின் மூலம் இனிய அனுபவம் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைபடி நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும். மாத மத்தியில் புதன் சாதகமாக இருப்பதால் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வாய்ப்புண்டு.
விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். கால்நடைவளர்ப்பும் லாபமாக இருக்கும். வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். நிலப்பிரச்னைக்கு சுமூகத்தீர்வு காண்பது நல்லது.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். உங்களின் செயல்பாடுகளால் குடும்பம் சிறக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பற்றி பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். டிச.28க்கு பிறகு சமூக மதிப்பு அதிகரிக்கும். டிச.3,4ல் ஆடை, ஆபரணம் வாங்கலாம். ஜன.2,3ல் உற்சாகத்துடன் காணப் படுவீர்கள். சகோதரிகளின் ஆதரவு உண்டாகும். உடல்நலம் சீராக இருக்கும். வயிறு தொடர்பான உபாதை ஏற்படலாம்.
நல்ல நாள்: டிச. 16,19,20,23,24,31, ஜன.1,2, 3,9,10,11,12
கவன நாள்: ஜன. 4,5,6 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சு வார்த்தையை தவிர்ப்பது அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 1,5 நிறம்: பச்சை, மஞ்சள்
பரிகாரம்: சூரியனை தினமும் காலையில் வணங்குங்கள். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட தவறாதீர்கள். விநாயகர், சிவன் வழிபாடு உ ங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.