பதிவு செய்த நாள்
20
டிச
2016
12:12
அருப்புக்கோட்டை;அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை குரு மகாலில், மகா அவதார் ஸ்ரீ கிரியா பாபாஜி அவதார தின குரு பூஜை நடந்தது. கணபதி பூஜை, மகா சங்கல்பம், நாம ஜபம், ஹோமம், குபேர தியானம், கோ பூஜை, கன்யா பூஜை, பிரம்ச்சாரி மற்றும் சுமங்கிலி, தம்பதி பூஜைகள், தே கோஷம், விஷ்ணு சகரஸ்ரநாமம், பாராயணம், வேள்வி பக்தர்களின் பஜனை நடந்தது. பூர்ணாகுதி, 108 சங்காபிஷேகம், கலச பூஜை, புஸ்பாஞ்சலி, ஹாரத்தி நடந்தது. ராமலிங்கா மில் இயக்குனர் தினகரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை நரசிம்மன் தலைமையில், ஸ்ரீ பக்த ஜன க்ரியா பாபாஜி சித்தர் பீட அமைப்பினர் செய்திருந்தனர்.