மதுரை: மதுரையில் திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி மற்றும் இசை கல்வி அறக்கட்டளை சார்பில் திருவாவடுதுறை ஆதின மடத்தில் டிச.,30 முதல் ஜன.,1 வரை மார்கழி தமிழிசை திருவிழா நடக்கிறது. இதில் இளம் இசை கலைஞர்களுக்கு தேவாரம், திருவாசகம், தமிழிசை பாடுவதற்கு மேடை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் திருமுறை இசை பாணர்கள், தமிழிசை கலைஞர்கள் பங்கேற்கின்றனர் என அறக்கட்டளை பொருளாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.