பதிவு செய்த நாள்
22
டிச
2016
12:12
குளித்தலை: குளித்தலை அடுத்த கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வர் கோவில், இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த, ஜூலையில், கோவில் உண்டியல் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில், மீண்டும் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், மூன்று லட்சத்து, 52 ஆயிரத்து, 428 ரூபாய் இருந்தது. தொடர்ந்து, கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வர், மேட்டுமருதூர் ஆராஅமுதீஸ்வர், சிவாயம் சிவபுவனேஸ்வர் கோவில்களில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.