சுப்ரபாதம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை எப்போது கேட்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2016 05:12
சுப்ரபாதம் என்றால் இனிய காலைப் பொழுது. பொழுது புலரும் நேரத்தில் குயில், கோழி போன்றவை கூவும். இனிய தென்றல் வீசும். வேதியர்கள் வேதம் ஓதுவார்கள். அடியவர்கள் துதிப்பாடல்களைப் பாடுவார்கள். இப்படிப்பட்ட இனிய சூழலில் இறைவன் பள்ளியறையிலிருந்து எழுந்தருளல் வேண்டும் என்ற பொருள்படும் படியாக சுப்ரபாதம் அமைந்துள்ளது. இதை விடியற்காலையில் கேட்க வேண்டும். கந்தசஷ்டி கவசம் எப்போது வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம்.