பதிவு செய்த நாள்
23
டிச
2016
12:12
திருவள்ளூர்: திருவள்ளூர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா, வரும், 28ம் தேதி துவங்கி, ஜன., 1ம் தேதி வரை, நடை பெறுகிறது. மார்கழி மாத மூல நட்சத்திரத்தன்று, அனுமன் ஜெயந்தி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர், பெரியகுப்பம் தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர, பிரம்மாணட ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில், ஒவ்வொரு மாதமும், மூல நட்சத்திரத்தன்று, மூல மந்திர ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, வரும், 28ம் தேதி, காலை 8:30 மணிக்கு, மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. மறுநாள், 29ம் தேதி முதல், 31ம் தேதி வரை, தினமும் காலை, 9:00 மணிக்கு, மூல மந்திர ஜப ஹோமம், அனுமன் சாலீஸா பாராயணம் நடைபெறுகிறது. மதியம், 11:00 மணியளவில், மகா தீபாராதனை நடைபெறும். வரும் ஜனவரி 1ம் தேதி, புத்தாண்டு அன்று, காலை 8:30 மணிக்கு, லட்சுமி குபேர யாகமும், காலை 11:00 மணிக்கு, ஸ்வர்ண புஷ்பார்ச்சனையும், மாலை 4:30 மணி முதல், பஞ்ச முக சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறும்.