பதிவு செய்த நாள்
23
டிச
2016
12:12
குமாரபாளையம்: குமாரபாளையம், ஸ்ரீ ஐயப்ப சுவாமி பிரார்த்தனை மண்டபம், ஐயப்ப பக்தர்கள் சார்பில், 10ம் ஆண்டு, 18 வகை அஷ்ட திரவிய தீர்த்தக்குட நகர் வலம் நடந்தது. ஐயப்ப சுவாமி சிலை, மற்றும் புதிதாக வெள்ளியால் உருவாக்கப்பட்ட, 18 படிகளுடன், காவிரி ஆற்றிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, நகராட்சி அலுவலகம் அருகே உள்ள, ஐயப்ப சுவாமி பிரார்த்தனை மண்டபத்தில் முடிந்தது. பின், ஐயப்ப சுவாமிக்கு பால், நெய், தயிர், திருமஞ்சனம், தேன், சந்தனம் உள்ளிட்ட, 18 வகை அஷ்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும், பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.