பதிவு செய்த நாள்
23
டிச
2016
12:12
சென்னிமலை: ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. சென்னிமலை அருகே, பெருந்துறை சாலையில் உள்ள ஈங்கூரில், தம்பிராட்டி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பொங்கல் விழா, கடந்த, 6ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், தீர்த்தக்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடந்தது. பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. ஈங்கூர் மட்டுமின்றி அவினாசி, திருப்பூர், கோவை, கோபி, பொள்ளாச்சி, சேலம், பழனி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவு பெறுகிறது.