பழநியில் பலமணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு விடுமுறை நாளில் நெரிசல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2016 12:12
பழநி: ஞாயிறு பொதுவிடுமுறை தினத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்ய மூன்று மணிநேரம் வரை காத்திருந்தனர். பழநி மலைக்கோயில் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்க வழக்கமாக சனி, ஞாயிறுகளில் ஏராளமான பிறமாவட்ட, மாநில பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன், அரையாண்டுதேர்வு விடுமுறை காரணமாக ஐயப்ப பக்தர்களுடன் பாதயாத்திரை பக்தர்களின் வருகையும் வெகுவாக அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிறு பொதுவிடுமுறையில் குவிந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரத்திற்கும் மேல் காத்திருந்தினர். மலைக்கோயில் பொதுதரிசன வழியில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். இரவு 7 மணி தங்கரத புறப்பாட்டை காண ஏராளமானோர் திரண்டனர். பழநி அடிவாரம் அய்யம்புள்ளிரோடு, பூங்காரோடு, சன்னதிவீதியின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்ட வாகனங்கள், ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.