ராமநாதபுரம் : சபரிமலை மண்டலபூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடந்தது. ராமநாதபுரம் பேராக்கண்மாய் ஐயப்பன் கோயிலில் திருவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. மண்டபம் ஐயப்பன் கோயிலில் நடந்த 108 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பஜனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்தனர்.