சிங்கம்புணரி: சிங்கம்புணரி ராமர் கோயிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. தனி சன்னதியில் அருள் பாலிக்கும் அனுமனுக்கு 16 வகை அபிஷேகங்கள்,அலங்காரம் செய்யப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இளையான்குடி: அறணையூர் ஊராட்சி ராஜபுளியேந்தல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா மற்றும் லட்சார்ச்சனை விழா நடந்தது. காலை 7:00 மணி முதல் லட்சார்ச்சனை,சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.பகல் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இதில் ராஜபுளியேந்தல், அறணையூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.