பதிவு செய்த நாள்
02
ஜன
2017
11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, ஆதி அய்யப்பன் கோவிலில், 27 அடி உயர மணிகண்டன் சுவாமி சிலை, புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே, க.உண்ணாமுலைபாளையம் கிராமத்தில், 1990ல், பூமியில் கண்டெடுக்கப்பட்ட மணிகண்டன் சுவாமி சிலையை வைத்து, கோவில் கட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ளது போல், இங்கு பூஜை நடக்கிறது. கோவிலில் உள்ள குன்றின் மீது, 27 படிகள் அமைக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 27 அடி உயர மணிகண்டன் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம் நடந்தது. நேற்று காலை, 11:45 மணிக்கு, 27 அடி உயர மணிகண்டன் சுவாமி சிலைக்கு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.