நதிகளைப் பெண்ணாகப் போற்றி வழிபடுவது மரபு. நதிகளின் பெயரை பெண் குழந்தைகளுக்குப் பெயராக வைப்பது நடைமுறையில் உள்ளது. கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி, வைகை, தாமிரபரணி ஆகியவை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. கிழக்கு நோக்கி ஓடுவதால் இவை நதி என பெண்பாலாக கருதப்படுகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி ஓடும் நர்மதை, தப்தி ஆகியவை ஆண் தன்மை கொண்டவை. இவற்றை நதி எனக் குறிப்பிடாமல் நதம் என்று ஆண்பாலாகக் குறிப்பிடுவது மரபாகும்.