காட்டிற்கு சென்ற ராமர், சித்ரகூடத்தில் பர்ணசாலை அமைத்து சீதை, லட்சுமணருடன் தவ வாழ்வில் ஈடுபட்டார். ராவணனின் தங்கை சூர்ப்பனகையின் துõண்டுதலால் மாரீசன் என்னும் அசுரன் மாய சக்தியால் பொன்மான் வடிவில் தோன்றினான். சீதையைக் கவரும் விதத்தில் அங்குமிங்கும் அலைந்தான். அதை சீதை தனக்காக செய்ததாக எல்லாரும் நினைப்பர். உண்மையில் வனவாசம் முடித்து அயோத்தி சென்றதும், அதைத் தன் மாமியாருக்கு பரிசாக கொடுக்க எண்ணினாள். அதற்காக மானைப் பிடித்து தரும்படி ராமரிடம் வேண்டினாள். ராமர் சென்றதும், ராவணன் அவளை இலங்கைக்கு கடத்தி விட்டான். மாமியாரைத் தாய் போல் நினைத்தவள் சீதை. அதேநேரம் கண்ணில் கண்ட பொருட்களுக்கெல்லாம் ஆசைப்பட்டால். பெண்களுக்கு ஆபத்தை தரும் என்ற நீதியையும் தனது மானிட அவதாரம் மூலம் இந்த உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறாள்.