பதிவு செய்த நாள்
03
ஜன
2017
12:01
திருப்பதி: மகா கும்பாபிஷேக பணிகளுக்காக, காளஹஸ்தி கோவில், பிப்., 4 முதல் மூடப்படும்’ என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், பிப்., 8ல், கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்காக, பிப்., 4 முதல், 7 வரை, கோவில் சன்னிதிகள் மூடப்பட்டு, கருவறை சிலைகளுக்கு அஷ்டபந்தனம் நடக்கிறது. ‘இந்த நாட்களில், பக்தர்கள் வந்து ஏமாற வேண்டாம்; கும்பாபிஷேகம் முடிந்து, பிப்., 9 முதல், பக்தர்கள், தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்’ என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.