பதிவு செய்த நாள்
04
ஜன
2017
12:01
குன்னுார்: குன்னுாரில் மழை வேண்டி பெண்கள் சார்பில், விளக்கு பூஜை நடந்தது. மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், முக்கிய நீராதாரங்கள் வறண்டு போனது. குன்னுாரில் வாழும் மக்களுக்கு,20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதை அடுத்து, மக்கள் ஊற்று நீரை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, குன்னுாரில் பெண்கள் சார்பில், விளக்கு பூஜை நடந்தது. இதில், பழைய அருவங்காடு, எல்லநள்ளி, கேத்தி, அனியாடா, ஆர்செடின், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து செவ்வாடை தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். கன்டோன்மென்ட் முன்னாள் தலைவர் வினோத்குமார், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வார வழிப்பாட்டு மன்ற தலைவி பிரபாவதி மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.