தூத்துக்குடி சிவன் கோயிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2011 11:10
தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோயில் திருக்கல்யாண விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 22ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுரை சங்கரராமேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை ஒட்டி காலையில் கணபதிஹோமம் நடக்கிறது. இதனை தொடர்ந்து கொடியேற்று விழா நடக்கிறது. பின்னர் அபிஷேக தீபாரதனையும், பித்தளை சப்பரத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது. நாளை 2ம் திருநாள் கிளிவாகனத்திலும், 3ம் திருநாள் அன்னப்பட்சி வாகனத்திலும், 4ம் திருநாள் சிம்ம வாகனத்திலும், 5ம் நாள் வெள்ளிமயில் வாகனத்திலும் திரு வீதி உலா நடக்கிறது. 6ம் நாள் வெள்ளி விருஷய வாகனத்திலும், 7ம் நாள் கமல வாகனத்திலும், 8ம் நாள் காமதேனு வாகனத்திலும் அம்பாள் வீதி உலா வருதலும், 9ம் திருநாள் தேரோட்டம் நடக்கிறது. அம்பாள் தேரில் ரதவீதி உலா நடக்கிறது. 10ம் திருநாள் பூம்பல்லக்கில் வீதி உலா வருதலும், திருவிழாவின் முக்கிய அம்சமான 11ம் திருநாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், 9.30 மணிக்கு அம்பாள் பட்டினபிரவேசமும் நடக்கிறது. வரும் 25ம் தேதி குடமுழுக்கு தீபாரதனை, ஊஞ்சல் தீபாரதனையும் விழா முடிகிறது.