பதிவு செய்த நாள்
12
ஜன
2017
11:01
தேனி: மாவட்டத்தின் பல்வேறு பகுதி சிவன் கோயில்களில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. அரண்மனைபுதுார் தட்சிணாமூர்த்தி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. உத்தமபாளையம்: காளாத்தீஸ்வரர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு அதிகாலையில் சிவகாமி உடனுறை நடராஜர், மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஆருத்ரா, சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. சுவாமி வீதி உலா வந்தார்.கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பெரியகுளம்: பெரியகுளம் கம்பம்ரோடு காளியம்மன் கோயிலில், ஆருத்ரா தரிசனம், கூடாரை வல்லியை முன்னிட்டு பூஜைகள் நடந்தன. சிவனுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உட்பட 18 வகையான அபிஷேகம், சிவனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், காளியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீ குருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் ஆலோசகர் சரவணன், நிர்வாகிகள் செய்தனர்.
* பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், கைலாசபட்டி, கைலாசநாதர் கோயிலில் சிவனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. கூடலுார்: கூடலுார் சீலைய சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சுவாமி நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அலங்காரம் , ஆராதனை நடந்தது. மகளிர் குழுவினர் நடராஜர் குறித்த பஜனை பாடல்கள் பாடினர்.
போடி: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிவனுக்கு 5 முகம் கொண்ட 10 ஆயிரத்தி 8 ருத்ராட்சம் கொண்டு ருத்ராட்ச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
* போடி அருகே பிச்சாங்கரை ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.