பண்ருட்டி: பண்ருட்டி பாரத மாதா தெருவில் மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. பண்ருட்டி இந்து அன்னையர் முன்னணி சார்பில் நேற்று மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரத மாதா தெருவில் பசுக்களுக்கு கோ பூஜை நடந்தது. பூஜையையொட்டி செல்வ விநாயகர் கோவிலில் காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள், பசுக்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.