குஜிலியம்பாறை: கூம்பூர் ஊராட்சி பாறைப்பட்டியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. 12 அடி உயரமும், மூன்று மீட்டர் சுற்றளவும் கொண்ட புற்று சிலையாக உள்ள காளியம்மனை, பாறைப்பட்டி, வால்நாயக்கனுார், கணக்கப்பிள்ளையூர், குட்டியம்மாள்குளம் புதுார் மக்கள் வணங்கி வருகின்றனர். இக்கோயிலில், மூன்று குக்கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்தனர். அன்றைய தினமே கிடா வெட்டும் சிறப்பாக நடந்தது. இதே போல் கணக்கப்பிள்ளையூர் மக்கள் நேற்று முன்தினமே ஆடல், பாடலுடன் திரண்டுவந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.