பதிவு செய்த நாள்
16
ஜன
2017
02:01
திருப்பூர் : பொங்கல் விழாவை முன்னிட்டு, திருப்பூர் அடுத்த ஊதியூர் வஞ்சிபாளையத்தில், உலக நலன் கருதி கோமாதா பூஜையும், 27 நட்சத்திர மஹா யாகமும் நடைபெற்றது. மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 27 நாட்டு பசு மாடுகளை கொண்டு, 27 நட்சத்திரங்களுக்கும் கோமாதா பூஜை நடந்தது. உலக அமைதிக்காக, வினை தீர்க்கும் விநாயகர் வேள்வி மற்றும் உலக நல வேள்வி நடைபெற்றது. இந்து முன்னணி மாநில பொது செயலாளர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். கோவை காமாட்சிபுரி ஆதினம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி சித்தர்பீடம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், பூஜையை நடத்தினார். இதில், 27 பசுமாடுகள் அலங்கரிக்கப்பட்டு, அந்தந்த நட்சத்திரங்கள் கொண்டவர்களை வைத்து, யாக பூஜை நடத்தப்பட்டது. சினிமா இயக்குனர் கஸ்தூரி ராஜா, இதில் பங்கேற்றார். இதில், ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட காங்கயம் இன காளை மாடுகள் மற்றும் குதிரைகள், பூஜைக்காக அழைத்து வரப்பட்டிருந்தன. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.