பதிவு செய்த நாள்
16
ஜன
2017
02:01
திருப்போரூர்: கந்தசுவாமி வழிபாடு மன்றத்தாரின், 26ம் ஆண்டு பால்குடவிழா சிறப்பாக நடைபெற்றது. திருப்போரூர் கந்தசுவாமி வழிபாடு மன்றத்தாரின் சார்பில் ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாளில், கந்தசுவாமி பெருமானுக்கு பால்குடவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டிற்கான விழா பொங்கலன்று சிறப்பாக நடைபெற்றது. இதில், கடந்த ஒரு மாதமாக மாலையணிந்து, விரதமேற்றிருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும், தங்கள் வே ண்டுதல்களை நிறைவேற்றினர். ச ர வணப்பொய்கையின் கிழக்குப்பகுதியில் அமை ந்துள்ள, நான்கு கால் மண்டபத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட பால்குடங்கள், திருப்போரூரின் மாடவீதிகளிலும், கிரிவலப்பாதையிலும் வலம் வந்து, கந்தசுவாமி கோவிலை வந்தடைந்தது. பின், கந்தசுவாமி பெருமானுக்கு பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. பின், பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. விழாவில், ஏராளமான உள்ளூர் வாசிகள் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டனர்.