பதிவு செய்த நாள்
21
ஜன
2017
02:01
மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை ‘நீத்தார் கடன்’ என்பர். ஆண்டுக்கு மூன்று முறையாவது செய்ய வேண்டும். பூலோகத்தில் ஒரு வருடம் என்பது பிதுர்களுக்கு ஒரு நாளாகும். ஒரு நாளில் நாம் மூன்று வேளை உணவு உண்பது போல, பிதுர் தர்ப்பணமும் வருடத்தில் மூன்று முறை செய்ய வேண்டும். அவை தை அமாவாசை, ஆடி அமாவாசை, மற்றும் புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை ஆகிய நாட்களாகும். இந்த நாட்களில், தீர்த்தக்கரைகளில் அமைந்த கோவில்களுக்குச் சென்று, சுவாமியை வழிபட்டு வரலாம். தீர்த்தத்தில் எள்ளும் தண்ணீரும் இறைத்து வந்தால் பிதுர்களின் பூரண ஆசிர்வாதத்தைப் பெறலாம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, கன்னியாகுமரி பகவதி அம்மன், தேனி அருகிலுள்ள சுருளிமலை, மதுரை அருகிலுள்ள திருப்புவனம், திருவேடகம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்டவை பிதுர் தர்ப்பணத்திற்கு உகந்தவை. திருச்சி காவிரி நதி படித்துறைகளிலும் பிதுர் தர்ப்பணம் செய்யலாம்.