பழமையான சிவன் கோவில்களில், மூலவர் சன்னிதி எதிரிலுள்ள மேல் உத்திரத்தில், சூரியனை மையப்படுத்தி, 12 ராசிகளின் சின்னத்தைப் பொறித்திருப்பர். மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவிலில், 12 ராசிகளுக்கு மத்தியில் சரஸ்வதிதேவி காட்சி தருகிறாள். கல்வியில் ஆர்வம் குறைந்த குழந்தைகளை இந்த ராசிக்கட்டத்தின் கீழ் நிற்க வைத்து வணங்கச் செய்தால், சரஸ்வதியின் அருளால் கிரக தோஷம் நீங்கும் என்கிறார்கள்.