பதிவு செய்த நாள்
25
ஜன
2017
12:01
பழநி: பழநி நகர்ப் புறத்தில், நாளுக்குநாள் தெருநாய்களின் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். பழநி, அடிவாரம்,ஆர்.எப்.ரோடு, லட்சுமிபுரம், தெற்குஅண்ணாநகர், சத்தியாநகர் உட்பட பலப் பகுதிகளில் தெருநாய்கள் ஏராளமாக சுற்றித் திரிகின்றன. இவற்றிற்கு முறையான இனப்பெருக்க தடுப்பூசி போட காரணத்தால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரவு 7 மணிக்கு மேல் கூட்டம் கூட்டமாக வாகன போக்குவரத்து அதிகமுள்ள ரோடு, தெருக்களில் உலா வருகின்றன. இதனால் பெண்கள், சிறுவர்கள் வெளியில் அச்சத்துடனே செல்கின்றனர். சிலநேரங்களில் விபத்துகளும் நடக்கிறது. தற்போது பாதயாத்திரை பக்தர்கள் இரவில் நடந்துவருவதால் அவர்களும் அடிவாரம், திண்டுக்கல் ரோட்டில் தெருநாய்கள் தொந்தரவால் பாதிக்கப்படுகின்றனர். பழநி நகரில் நோய்வாய்பட்டுள்ள, தெருநாய்களை பிடிக்கவும், நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபத்த தடுப்பூசிகள் இடவும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் வினய் உத்ரைவிட வேண்டும்.