பதிவு செய்த நாள்
28
ஜன
2017
12:01
கம்பம்: தை அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் குளித்து ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.தை அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை முதல் சுருளி அருவிக்கு ஏராளமானோர் வரத் துவங்கினர். அருவியில் குறைவான அளவே தண்ணீர் வரத்து இருந்தது. அதில் வரிசையில் நின்று குளித்தனர். பின் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து வேலப்பர், பூதநாராயணர், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். ஆதி அண்ணாமலையார் கோயிலில் சிவனடியார் முருகன் சுவாமிகள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. கம்பத்தில் இருந்து சுருளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸ் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
*தை அமாவாசையை முன்னிட்டு உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. முல்லையாற்றில் தர்ப்பணம் செய்து விட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
போடி: போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் பழமையான கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில் உள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு இங்கு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* மேலச் சொக்கநாதர் கோயில், பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லையாசுவாமி கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.