பெருந்துறை: பெருந்துறை கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை நடக்கிறது. பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் அருகே, கோட்டை பிரசன்ன வெங்கடரமண சுவாமி மற்றும் கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (9ம் தேதி) காலை, 8:30 மணியளவில் நடக்கிறது. இதையொட்டி யாக சாலை அமைத்து, திங்கட்கிழமை முதல் யாக பூஜைகள் நடந்து வருகின்றன. விழா ஏற்பாடுகளை, திருப்பணிக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.