பதிவு செய்த நாள்
10
பிப்
2017
12:02
சின்னாளபட்டி, தைப்பூச விழாவை முன்னிட்டு சின்னாளபட்டி கடைவீதி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில், பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சந்தனக்காப்புடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது.
* கீழக்கோட்டை சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில், வள்ளலார் வழிபாடு நடந்தது. அதிகாலையில் அருள் விளக்கு ஏற்றப்பட்டு, அகவல் பாராயணம் நடந்தது. மகா தீபாராதனையுடன் அவல் பிரசாதம் வழங்கல், அன்னதானம் நடந்தது. சதுர்முக முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிசுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயிலில், தைப்பூச சிறப்பு பூஜைகள் நடந்தது.
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை அபிஷேகம் நடந்தது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவார, திருவாசக பாராயணத்துடன் அன்னதானம் நடந்தது.