Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் சிவராத்திரி ... கோட்டை மாரியம்மன் பூச்சாட்டு விழாவுக்கு தயாராகும் பூச்சட்டிகள் கோட்டை மாரியம்மன் பூச்சாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தானியம் பங்கிடும் முறை தவசம் வரலாற்று நினைவு சின்னமானது
எழுத்தின் அளவு:
தானியம் பங்கிடும் முறை தவசம் வரலாற்று நினைவு சின்னமானது

பதிவு செய்த நாள்

18 பிப்
2017
10:02

கிராமங்களில் பலவித தொழில் செய்வோர்க்கு உழைப்பிற்கான பங்காக வழங்கப்பட்ட தவசம் தற்போது வரலாற்றின் நினைவு சின்னமாகிவிட்டது. ஆதிமனிதர்கள் தங்களை செம்மைப்படுத்திகொண்டு, விவசாயம் கால்நடைகள் வளர்ப்பு என தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால் அனைவரும் ஒரே தொழிலில் ஈடுபட்டால், தேவைகளை ஈடு செய்ய முடியாது. இதனால், மனித சமுதாயத்தினர் பலகூறுகளாக பிரிந்து, பொதுவான விளைச்சலுக்கும், மனிதகுல மேம்பாட்டுக்கும் தேவையான பல தொழில்களில் ஈடுபட்டனர். விவசாயம் செய்ய ஒரு பிரிவினரும், இதற்கு தேவையான கருவிகளை செய்ய ஒரு தரப்பினரும், வீடுகளை கட்டித்தர ஒரு பிரிவினரும், இதர தேவைகளை பூர்த்தி செய்ய பல பிரிவினரும், என தொழில்கள் அடிப்படையில் பிரிந்து ஒருவரின் தேவைகளை மற்றொருவர் ஈடுசெய்தனர்.

இதனால் ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் தொழில்களில் முழுமையான கவனம் செலுத்தி தானிய விளைச்சலை பெருக்கினர். இதற்கு ஈடாக, விளைந்த தானியங்களை ஆண்டுக்கு ஒரு முறை அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.இதுபோல் தானியங்கள் பங்கிடுவதை தவசம் என குறிப்பிட்டனர். காலச்சக்கரம் சுழல, சுழல உழைப்புக்கு தகுந்த அளவு தானியம் அளந்து கொடுக்கப்பட்டது. பின்னாளில் இதுதான் கூலியாகவும், சம்பளமாகவும் மாற்றம் பெற்றது. கடந்த நுாற்றாண்டு வரை இந்த தவசம் வழங்கும் முறை கிராமங்களில் நடைமுறையில் இருந்தது.

வள்ளம்: அறுவடைக்கு பின், களத்து மேட்டில் தானியங்களை குவித்து வைத்து, வள்ளம் என்ற அளவையை பயன்படுத்தி இதர தொழிலில் ஈடுபட்டவர்களுக்கான பங்கை அளந்து கொடுத்தனர். ஐந்து கிலோ அளவு தானியங்கள் கொள்ளளவு கொண்டதாகவும், இரண்டு அடி உயரம், ஒரு அடி சுற்றளவில் வள்ளம் இருக்கும். கடந்த நுாற்றாண்டில் இரும்பிலும், அதற்கு முந்தைய காலத்தில் மரத்திலும் இந்த வள்ளத்தை உருவாக்கி பயன்படுத்தினர். இந்த தவசம் தை மாதத்தில் அனைவருக்கும் வினியோகம் செய்யப்பட்டது.மடத்துக்குளம் பகுதியிலுள்ளவர்கள் கூறுகையில், மடத்துக்குளம் தாலுகா பகுதியிலுள்ள தாமரைபாடி, நாட்டுக்கல்பாளையம் கண்ணாடிப்புத்துார், கடத்துார் போன்ற பூர்வீக கிராமங்களில், 1970 ஆண்டு, வரை தவசமுறை நடப்பில் இருந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களாலும், இதர தொழில் வளர்ச்சியாலும் மெல்ல மெல்ல மறைந்து போனது, என்றனர்.

-நமது நிருபர்-

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar